ச்சே…! ஏன் இந்த உலகம் நாளுக்கு நாள் மோசமாகிட்டே போகுது

Minimalist
3 min readAug 4, 2019

--

ஒரு சின்ன கேள்வி மூலம் இந்த கட்டுரையை நான் ஆரம்பிக்க விரும்புகிறேன்

கேள்வி என் 1. இந்தியாவில் இளைஞர்கள் கல்வியறிவு விகிதம் ஏறக்குறைய எத்தனை சதவிகிதம்?

  1. 90%
  2. 80%
  3. 70%

கேள்வி என் 2.மேலுள்ள கேள்வியை 1990றில் கேட்டிருந்தால் அதன் விடை என்னவாக இருந்திருக்கும்?

  1. 90%
  2. 80%
  3. 70%

(கேள்விக்கான விடைகள் கட்டுரை கடைசியில் உள்ளது)

மனிதனின் மூளை செயல்பாடு

செய்திகளை வியத்தகு முறையில் ஒளிபரப்பினால் மக்களை எளிதில் சென்றடையும். இதற்கு ஊடகங்களை மட்டுமே குற்றம் சொல்லமுடியாது. நம்முடைய மூளையும் காரணம். ஏனெனில் மனிதனின் மூளை காடுகள் மற்றும் நிச்சயமற்ற சூழ்நிலையில் வாழ ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மூளையில் உள்ள உயிர்வாழ்வதற்கான உள்ளுணர்வு நம்மை வியத்தகு செய்திகளை கவனிக்க செய்யும். ஒரு உதாரணம் தருகிறேன்.

பக்கத்து ஊரில் கொள்ளை போனபோது நம்மில் எத்தனை பேர் இந்த உலகமே பாதுகாப்பற்றதாக உணர்வோம்.

கவனமாக மற்றும் ஜாக்கிரதையாக இருப்பது நல்லது தான். அதே சமயம் நமக்கு ஏற்படும் பயம் அல்லது பாதுகாப்பற்ற உணர்வு உண்மையை மறைத்துவிடும். கெட்ட விஷயங்கள் நடப்பதே இல்லை என்று நான் கூறவில்லை. கெட்ட விஷயங்கள் இந்த உலகத்தில் குறைந்து விட்டது என்பதே உண்மை. அசம்பாவிதங்கள் நடக்கவே கூடாது. அந்த நிலைக்கு நாம் கண்டிப்பாக செல்ல வேண்டும். அதே சமயம் நாம் இது வரை நடந்துள்ள முன்னேற்றத்தையும் அங்கீகரிக்க வேண்டும்

கேள்வி என் 3. கொலை கொள்ளை இந்தியாவில் அதிகரித்திக்கிறதா?

  1. ஆம்
  2. குறைந்துள்ளது
  3. குறையவில்லை

குழந்தை பாதுகாப்பு

மேலும் ஒரு தகவலை பதிவு செய்ய விரும்புகிறேன். ஒரு நாட்டின் வளர்ச்சியை குழந்தை இறப்பு விகிதம் (child mortality rate) பிரதிபலிக்கும். அதாவது மனித சமுதாயத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நம்மை சார்ந்து இருக்கும் நம் குழந்தைகளை எந்த அளவில் பாதுகாக்கிறோம் என்ற குறியீடு. ஏனெனில் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் தொற்றுநோய், பாதுகாப்பற்ற சாலை, ஊட்டச்சத்து குறைபாடு போன்றவற்றில் எளிதில் பாதிப்படைய வாய்ப்புள்ளது. குழந்தைகள் தான் நாட்டின் எதிர்காலம். குழந்தை இறப்பு விகிதம் இந்தியாவில் கணிசமான அளவு குறைந்துள்ளது. கீழே உள்ள தகவல்கள் கடந்த ஐம்பது ஆண்டுகளில் நம் முன்னேற்றத்தை காணலாம். இது புஜ்யம் ஆக வேண்டும். அதற்கான பாதையில் நாம் சென்று கொண்டிருக்கிறோம்

வறுமைக் கோடு

வறுமை கோட்டில் வாழும் மக்கள் தினம் தண்ணீர் சுமந்து மற்றும் பள்ளிக்கு செல்ல போக்குவரத்து இல்லாமல் கட்டப்படுகின்றனர். ஒரு மிதிவண்டி, தண்ணீர் சுமக்க இரண்டு குடம் இருந்தால் இவர்கள் வாழ்வில் பெரிய மற்றம் ஏற்படும். இதுவே இன்றைய வறுமையின் எதார்த்தம். ஓரளவு வசதியாக இருப்பவர்களுக்கு தினம் ஐம்பது ரூபாய் வருமானம் அதிகரித்தால் வாழ்வில் பெரிய மாற்றம் கொண்டுவராது. ஆனால் வறுமை கோட்டிற்கு கீழ் இருப்பவருக்கு அது பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்தியாவில் கடந்த இரண்டு தசாப்தத்தில் வறுமை கோட்டிற்கீழ் வாழ்ப்பவர்கள் பாதியாக குறைந்துள்ளனர். இதுவும் நம்முடைய நாட்டின் முன்னேற்ற பாதையை குறிக்கின்றது.

முடிவுரை

நான் குறிப்பிட்டுள்ள தகவல்கள் நம் கடந்து வந்த பாதையை எடுத்துரைக்கின்றது. இனி நாம் அதே பாதையில் வேகமாக செல்ல வேண்டும். கிராமப்புற பெண்கள் பாதுகாப்பு மற்றும் கல்வியில் நாம் கவனம் செலுத்தவேண்டும். ஊடகத்தில் தேவையில்லாத விவாத மேடை மற்றும் இரண்டு தரப்பினரை விவாத சண்டைபோட தூண்டிவிடும் பத்திரிகையாளர்களுக்கு இந்தியாவில் பஞ்சமே இல்லை. போதா குறைக்கு அணைத்து அரசியல் கட்சிகளும் செய்தி தொலைக்காட்சி வைத்துள்ளனர். நம்பிக்கையான தகவல்களை முழு சூழலில் புரிந்துகொண்டால் தேவையில்லாத செய்திகளை நாம் ஒதுக்கிவிடலாம். முன்னேற்றப்பாதையில் நம் நாட்டை எடுத்து செல்வோம் நம்மால் முடிந்த உதவியை குழந்தைகள் கல்வி மற்றும் முதியோர்க்கு செய்வோம்

தமிழ் வாழ்க! ஜெய் ஹிந்த்!

படித்தது பிடித்திருந்தால் தயவு கூர்ந்து இந்த கட்டுரைக்கு கைத்தட்டவும்

விடைகள்

கேள்வி என் 1. 90%

கேள்வி என் 2. 80%

கேள்வி என் 3. குறைந்துள்ளது

வரவுகளை

--

--

Minimalist
Minimalist

No responses yet